
" காஸா மீதான தாக்குதலுக்கு காரணம் ஹமாஸ் அமைப்பே "
இப்படி உளறியவர் சாட்சாத் புஷ் தான் , ஏன் இந்த கொலைவெறி ? தங்களுக்கு உயிரைக்காக்க கூட சுதந்திரம் இல்லாத நாட்டில் மக்கள் வாழ்ந்து வருவதே பெரிய விஷயம். இந்த லட்சணத்தில் அமெரிக்க அதிபர் "செருப்படிபட்ட வீரர் " புஷ் தனது செல்ல நாய்க்கு ரொட்டி துண்டுகளாக இந்த உரையை வீசியுள்ளார். அப்பாவி காசா மக்கள் என்ன தீங்கு செய்தார்கள் அங்கு பிறந்ததை தவிர?
சரி அதெல்லாம் இருக்கட்டும் அமெரிக்காவை யார் எதிர்த்தாலும் தீவிரவாதியா? என் இந்த பொதுவுடமை தோழர்கள் எதிர்க்கிறார்கள் அவர்களை அரசியல் சதுரங்கத்தில் வெல்ல இயலாமல் . தன் நாட்டு மக்கள் உணவின்றி பொருளாதார வீழ்ச்சியினால் வீடு இல்லாமல் இருப்போர் பெருகி வருகிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு இனத்தையே பூமியில் இருந்து அழிக்க நினைக்கிறார்கள். கேட்டால் தீவிரவாதத்தை அழிக்கிறார்களாம்? யாரிடம் சொல்ல இவர்களின் இந்த இழி நடத்தையை.
ஏன்டா உணவு தானியங்கள் விலை தாறுமாறாக உயர்ந்தது என்று காரணம் கேட்டால் , "இந்தியாவில் நடுத்தர வர்க்கம் சாப்பாட்டு ராமர்களாய் மாறி விட்டார்கள்" என்று கூசமால் புளுகிய அமெரிக்க ஆளும் வர்க்கம், போபால் பயங்கர வாதத்துக்கு என்ன பதில் ? எதோ உன் நாட்டு பிரஜை சில பேர் மும்பை குண்டுவெடிப்பில் இறந்தார்கள் என்பதற்க்காக இந்திய வந்து விசாரித்து போகிறாய். ஆயிரக்கணக்கில் இறந்து லட்சக்கணக்கில் இன்னமும் மரணத்துடன் போராடுகின்ற எம் போபால் மக்களை பார். எதோ உனக்குத்தான் உயிரோடு இருக்க அதிகாரம் இருப்பதையும் மற்றவனெல்லாம் சாகத்தான் வேண்டும் எனவும் நீ செய்துவரும் காரியங்களுக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறாய்? . உன் எண்ணெய் ஆசைகளுக்கு யார் எதிரில் முட்டுக்கட்டை போட்டார்களோ அவரெல்லாம் உனக்கு எதிரி. இரட்டை கோபுரம் சாய்ந்த பின்தான் உன் கூற்றை எல்லாம் உலகமெல்லாம் கேட்டதே. உனக்கு ஆபத்து என்றால் உலகத்துக்கே ஆபத்து. அதைபோல உனக்கு லாபம் வந்தால் உலகத்துக்கு கொடுத்துவிட வேண்டியது தானே.
உன் ஆயுதம் விற்க வேண்டுமென, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிண்டு முடித்து விட்டு ரத்தம் பார்க்க ஆசைப்படுகிறாய். என் இந்த கொலை வெறி?
ஆப்கனிஸ்தானில், ஈராக்கில் இறங்கிய உன் இராணுவம் , யாரை பார்த்தாலும் சந்தேகம் கொள்கிறது. நிறைமாத கர்ப்பிணி என்று கூட இல்லை, வயிற்றில் குண்டுவைத்து இருக்கலாம் என்ற காரணத்தினால் அவர்களுக்கு ஒரு துப்பாக்கி குண்டை பரிசாக கொடுப்பீர்கள். உடலில் ரத்தாறு ஓடுவதை ரசிப்பீர்கள் .
உங்கள் உடல் பசிக்கு அபலை பெண்கள். உங்கள் பொழுது போக்கிற்கு போர்கைதிகள், அவர்களின் உடம்பை சித்ரவதை செய்வீர்கள். எப்படி முடிகிறது உங்களால்? என்ன செய்தாலும் தீவிரவாத ஒழிப்பு என்ற ஒற்றை சொல்லில் நிறுத்தி விடுவீர்கள். மனிதத்தன்மையற்ற செயல்களை செய்து விட்டு மனித உரிமை பற்றி பேசுகிறீர்கள் . காசாவில் கொல்லப்பட்ட மக்கள் தீவிரவாதிகளா? தீவிரவாதிகளை அழிக்கிறீர்களா? அல்லது இனத்தையே அழிக்கிறீர்களா?
உங்களிடம் இல்லாத ஆயுதமா ? ஈராக் என்ற தேசத்தில் பல அழிவுக்கருவிகள் உள்ளன என தங்களின் அண்டபுளுகை என்ன சொல்ல? தனக்கு உலகமே அடிமையாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைப்பதை தடுக்கும் சக்திகள் உங்களுக்கு தீவிரவாத மாகத்தான் இருக்கும். ஏகாதிபத்ய அமெரிக்காவே நீ செய்த அக்ரமங்களுக்கு விரைவில் சம்பளம் பெறுவாய்.
"அனைத்துக்கும் மேலாய் முதாளித்துவம் தனக்கு சவக்குழி தோண்டுபவரையே உற்பத்தி செய்கிறது " பேராசானின் தத்துவம் உனக்கு பொருந்தக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது.