சனி, 27 டிசம்பர், 2008

தீவிரவாதத்திற்கு முன்பு



எதோ
சட்டம் கடுமையாக்கப்பட்டால் தீவிரவாதத்தை ஒழித்து விடலாம் என கனவு கோட்டை கட்டிக்கொண்டு இருந்ததால் கண்டிப்பாக அது நகைப்புக்கு உரியதே அன்றி வேறில்லை. உருவாகிறதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தந்து விட்டு ஐயோ அம்மா என்றால் என்ன செய்வது?

தீவிரவாதி எனப் படுபவன் என்றும் தன் உயிருக்கு பயந்து இந்த காரியத்தில் இறங்க மாட்டான் ஆனால் அரசின் வாதம் என்னவென்றால் இந்த நடவடிக்கை சட்டத்தின் மூலம் குணப்படுத்தலாம் என உரைப்பது கண்டிப்பாக கண்துடைப்பே அன்றி வேறில்லை. அனைவர்க்கும் வேலை, வறுமையற்ற வாழ்வு, நோய் தீர்க்க மருத்துவமனைகள் , சுகாதாரம் இவற்றை அனுபவிக்க சுதந்திரம் இவை இருந்தாலே போதுமே . ஏன் இந்த நிலை . இந்திய வட கிழக்கு மாநிலங்களின் நிலை என்ன? ஏன் அவை நக்சல்பாரிகளை கொண்டு உள்ளது? உருவாவதன் காரணம் என்ன? ஏன் அந்த நிலையை சரி செய்யக்கூடாது?

ஏகாதிபத்திய அடிவருடிகளை இருந்து நாம் சாதிக்கபோவது என்ன? நம் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் இங்கு குறைபட்டு நிற்கிறது ஆனால் இங்கு சந்திரனுக்கும் மற்ற கிரகங்களுக்கும் வான் அறிவியல் ஆராய்ச்சி செய்கிறார்கள். மக்கள் பிரச்சனை தான் நாட்டின் பிரச்சனை. ஒருநாள் தனி நபர் வருமானம் என்ன? ஏன் அந்த இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவேளை போ உள்ளது? வறுமையால் பஞ்சத்தில் மடிகின்ற மக்களின் வாழ்க்கை ஏன் இப்படி உள்ளது? இத்தனை சிந்திக்காமல் சந்திரனுக்கும் கோள்களுக்கும் நம் வரிப்பணம் சூறையாடப்படுகிறது.

லஞ்சம் இந்தியாவிலேயே கொடிய நோயாக வளர்ந்து வருகிறது ஊழல் தான் இதன் தாய். அந்நிய முதலீடுகளின் வழியே இவை வளர ஆரம்பிக்கின்றன.

ஏகாதிபத்திய
உணர்வுகளை களைந்து நாட்டுமக்களுக்கு எந்த அரசு நன்மை செய்ய நினைக்கிறதோ அந்த அரசை நாம் அமைக்க முன்வர வேண்டும். என்ன செய்வது துரதிஷ்டவசமாக அந்த பாக்கியம் நாம் இன்னும் அடையவில்லை .ஓரளவு தன்னிறைவு பெறவேண்டிய காலங்களிலே இந்த செய்தி வந்து இருப்பின், எதிகாலம் என்ன ஆகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது.

டாடா க்களும் அம்பானிகளும் தீர்மானிக்கிற பொருளாதாரத்தை நம் விவசாயிகள் என்று தீர்மானிக்க ஆரம்பிக்க போவது என்று?
சாவின் விளிம்பில் நிற்கின்ற இவர்களை அரசு கண்டு கொள்ளவதே இல்லை. ஆனால் தாஜ் ஓட்டல் இழப்பீடு தர யோசித்து கொண்டு இருக்கிறது. பெரிய அலுவலக முகப்புகளிலும் சாப்ட்வேர் பவனங்களிலும், மேகம் தொடும் ஹோட்டல் களுக்கும் இனி பாதுகாப்பு அதிகாரிக்கும். வழக்கம் போல மக்கள் வரிப்பணம் சூறையாடப்படும்.

விவசாயிகள் படுகொலை செய்யவைக்க படுகின்றனர் அரசால். வானம் பொய்க்கிறது . அரசு ஏய்க்கிறது. விழாக்களுக்கு குறைவில்லை. நேரத்திற்குஒரு கண்ணீரில் அரசின் பார்வையில் தெரிவதில்லை. தீவிரவாத நடவடிக்கைகளை வேரருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் திவிரவாதி உருவாவதர்க்கான சூழ்நிலையை உருவாக்காதீர்கள்.

பொருளாதார சிறப்பு மண்டலங்கள் அமைத்து நாட்டின் வளமையை பெருக்க போவதாய் சொல்லிக்கொண்டு திரிவானேன்? இந்த நிலைமையில் அவற்றின் கழிவுகள் ஆற்றில் கலந்து ஏழை மக்களின் வயிற்றில் பல நோய்களை இலவசமாக தருகின்றன. ஆழ்துளை கிணறுகள் மூலம் மக்களின் அடிபம்பு நீர் ஆதாரங்களை சூறையாடுகின்றன.

ஆக அடித்தட்டு மனிதன் வாழவே முடியாத இத்தகு சூழ்நிலையையும் தந்து விட்டு, மேலும் எப்போது பார்த்தாலும் பாகிஸ்தான் தீவிரவாதி என ஓலமிட்டு ஓட்டுக்களை அறுவடை செய்ய முயற்சி வேறு. கலவரங்களை தூண்டி விட்டு குளிர் காய்வோர் பலர் இந்த கூட்டத்தை சார்ந்தவர் தான்.

தீவிரவாதத்தை எதிர்க்கும் முன்பு இந்த நடவடிக்கைகளையும் செய்தால் ஏன் தீவிரவாதி உருவாகப்போகிறான்?

கருத்துகள் இல்லை: