
அமெரிக்காவின் வேலை "மற்ற நாடுகளுக்கிடையில் சண்டை இழுத்து விடுவதே ", மும்பை குண்டு வெடிப்பிற்கு யாரை கை கட்டலாம் என உளவுத்துறை மண்டை குடைந்து கொண்டு இருந்த போது, கண்ணைமூடிக்கொண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை கைகாட்டதுணியும் சராசரி குடிமகனுக்கு கூட இல்லாத அக்கறை அமெரிக்காவிற்கு வர காரணம் என்ன? நான் தான் எத்தனை காலத்துக்கு இப்படியே ஒத்தையிலே மத்த நாட்ட அடிக்கறது நீயும் வந்தா எனக்கு துணையா இருக்கும். கேட்டா தீவிரவாத வேட்டை என பத்திரிககளில் முதல் பக்கங்களை அலங்கரிக்க வேண்டாமா?.
என்னவோ ஏதோ வென பரபரப்புடன் செய்தி தாள் வாங்கினால் "மும்பை குண்டுவெடிப்பு செய்தி " பற்றி பக்கம் பக்கமாக நமது அனுதாபங்களை அள்ள பயிற்று விக்கப்பட்ட பல பத்திரிக்கைகள் நன்றாக ஜோடிக்க பட்டிருந்தன. உண்மைதான் தீவிரவாதிகள் அந்த பணக்கார ஓட்டல்களை பிடித்ததென்னவோ உண்மைதான். எதோ, தீவிரவாதமே இப்போது தான் நம் நாட்டில் நடக்கிறது. சட்டப்படி தண்டிக்க வேண்டும் என பல உளறல் களை கேட்டு நாம் அலுத்து விட்ட பின், இந்த செய்தி வருகிறது. இருக்கட்டும், ஏன் விவசாயிகளின் பிரச்சனைகளை பற்றி இப்போதெல்லாம் எழுதுவதில்லை? ஏன் வறுமை நீக்க வழிகளை சொல்லவில்லை? அதை விடமுக்கிய விடயமான மதபூசல்கள் களைய, கலவரம் ஒடுக்க வழி சொல்லவில்லை? ஏன் இப்போது யாரும் இதனால் பாதிக்க பட வில்லையா? பணக்காரர்களின் ஓய்வு விடுதி பற்றி இவ்வளவு கரிசனபடும் இவைகள் அதன் பக்க ஓரமாய் கிடக்கும் குடிசைகள் அவ்வபோது தீக்கு இரையாவது பற்றி இடுகையிடுவது இல்லையே ஏன்? அப்படியே இட்டாலும் ஓரமாய் இட்டு, அனுமதி இல்லாமல் இருக்கும் இது போன்றவை அகற்ற பட வேண்டியன எனத் தானே இடுகை இடபடுகின்றன.
தீவிரவாத ஒழிப்பில் முன்னனில் விளங்கும் அமெரிக்கா, பின் ஏன் ஒசாமாவை பிடிக்க இத்தனை காலம் எடுத்து கொள்கிறது? யரேமற்ற இந்த வேஷம் இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை மூட்டிவிட்டு தன் ஆயுத விற்பனை மூலம் சரிந்த தம் பொருளாதாரத்தை சரிகட்ட பார்க்கிறதா? பிரச்சனை இந்தியாவிற்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குமே யன்றி பாகிஸ்தான் அரசுக்கல்ல. திவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்த பின், போர் என கூறுவது முட்டாள் தனமான வார்த்தை. தீவிரவாத முகாம்களை களை எடுக்கவேண்டிய அவசியத்தை பற்றி கூற அமெரிக்காவிற்கு அருகதை இல்லை. தன் நாட்டை பார்து கொண்டால் போதும். இந்தியாவிற்கோ பாகிஸ்தான் நாட்டிற்கோ சொல்லவேண்டிய அவசியமில்லை.
ஈராக் மீது போர் தொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார் அமெரிக்கா அதிபர் புஷ். அமெரிக்க உளவுத்துறை மீது குற்றம் சொல்கிறார். அது இருக்கட்டும் அப்படியானால் உடனடியாக படைகளை திருப்பிக்கொள்ள வேண்டாமா? எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாக்கப்பட்டு, பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு பயன்பட்டு உயிர் இழந்திருப்பர்? நஷ்ட ஈடு உண்டா அவர்களுக்கு? அப்படி ஈந்தாலும் போன மானம் மீண்டும் வருமா? முஸ்லீம் இனத்தையே அழித்து, அமெரிக்காவே அகில உலகத்திற்கும் ராஜா வாக திகழ தானா இந்த நாடு பிடிக்கும் படலம்? தன் நாட்டு மக்களையேய் காப்பாற்ற வழிய காணோம். இதுல உலகத திருத்த கிளம்பிட்டராம்?
2 கருத்துகள்:
\\ஈராக் மீது போர் தொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார் அமெரிக்கா அதிபர் புஷ்\\
இன்னும் கொஞ்சம் தான் இருக்கு ஈராக்
முழுசா அழிச்சிட்டு சொல்லவேண்டியதுதானே புஸ்ஸ்ஸ்ஸ்
" இன்னும் கொஞ்சம் தான் இருக்கு ஈராக் முழுசா அழிச்சிட்டு சொல்லவேண்டியதுதானே புஸ்ஸ்ஸ்ஸ்"
தங்கள் கூறியபடி அமெரிக்கா முழுதாய் அழிக்காமல் விட்டதற்கு காரணம் அங்குள்ள மக்களின் எதிர்ப்புதான். ஈரக் என்ற அழகிய தேசத்தில் அமெரிக்க புயல் நாசங்களை பதிவு செய்து கொண்டு இருக்கிறது. இத்தனை காலம் மாற்றாது. கடமை வீரர்கள் தான் மாற்றுவார்கள்.
AMERICA IS NOT A REBUBLICAN COUNTRY. EVEN BECAUSE ANY REBUBLICAN COUNTRY, ARE NOT INTERUT ANOTHER COUNTRY MATTERS
கருத்துரையிடுக