சனி, 27 டிசம்பர், 2008

தீவிரவாதத்திற்கு முன்பு



எதோ
சட்டம் கடுமையாக்கப்பட்டால் தீவிரவாதத்தை ஒழித்து விடலாம் என கனவு கோட்டை கட்டிக்கொண்டு இருந்ததால் கண்டிப்பாக அது நகைப்புக்கு உரியதே அன்றி வேறில்லை. உருவாகிறதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தந்து விட்டு ஐயோ அம்மா என்றால் என்ன செய்வது?

தீவிரவாதி எனப் படுபவன் என்றும் தன் உயிருக்கு பயந்து இந்த காரியத்தில் இறங்க மாட்டான் ஆனால் அரசின் வாதம் என்னவென்றால் இந்த நடவடிக்கை சட்டத்தின் மூலம் குணப்படுத்தலாம் என உரைப்பது கண்டிப்பாக கண்துடைப்பே அன்றி வேறில்லை. அனைவர்க்கும் வேலை, வறுமையற்ற வாழ்வு, நோய் தீர்க்க மருத்துவமனைகள் , சுகாதாரம் இவற்றை அனுபவிக்க சுதந்திரம் இவை இருந்தாலே போதுமே . ஏன் இந்த நிலை . இந்திய வட கிழக்கு மாநிலங்களின் நிலை என்ன? ஏன் அவை நக்சல்பாரிகளை கொண்டு உள்ளது? உருவாவதன் காரணம் என்ன? ஏன் அந்த நிலையை சரி செய்யக்கூடாது?

ஏகாதிபத்திய அடிவருடிகளை இருந்து நாம் சாதிக்கபோவது என்ன? நம் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் இங்கு குறைபட்டு நிற்கிறது ஆனால் இங்கு சந்திரனுக்கும் மற்ற கிரகங்களுக்கும் வான் அறிவியல் ஆராய்ச்சி செய்கிறார்கள். மக்கள் பிரச்சனை தான் நாட்டின் பிரச்சனை. ஒருநாள் தனி நபர் வருமானம் என்ன? ஏன் அந்த இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவேளை போ உள்ளது? வறுமையால் பஞ்சத்தில் மடிகின்ற மக்களின் வாழ்க்கை ஏன் இப்படி உள்ளது? இத்தனை சிந்திக்காமல் சந்திரனுக்கும் கோள்களுக்கும் நம் வரிப்பணம் சூறையாடப்படுகிறது.

லஞ்சம் இந்தியாவிலேயே கொடிய நோயாக வளர்ந்து வருகிறது ஊழல் தான் இதன் தாய். அந்நிய முதலீடுகளின் வழியே இவை வளர ஆரம்பிக்கின்றன.

ஏகாதிபத்திய
உணர்வுகளை களைந்து நாட்டுமக்களுக்கு எந்த அரசு நன்மை செய்ய நினைக்கிறதோ அந்த அரசை நாம் அமைக்க முன்வர வேண்டும். என்ன செய்வது துரதிஷ்டவசமாக அந்த பாக்கியம் நாம் இன்னும் அடையவில்லை .ஓரளவு தன்னிறைவு பெறவேண்டிய காலங்களிலே இந்த செய்தி வந்து இருப்பின், எதிகாலம் என்ன ஆகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது.

டாடா க்களும் அம்பானிகளும் தீர்மானிக்கிற பொருளாதாரத்தை நம் விவசாயிகள் என்று தீர்மானிக்க ஆரம்பிக்க போவது என்று?
சாவின் விளிம்பில் நிற்கின்ற இவர்களை அரசு கண்டு கொள்ளவதே இல்லை. ஆனால் தாஜ் ஓட்டல் இழப்பீடு தர யோசித்து கொண்டு இருக்கிறது. பெரிய அலுவலக முகப்புகளிலும் சாப்ட்வேர் பவனங்களிலும், மேகம் தொடும் ஹோட்டல் களுக்கும் இனி பாதுகாப்பு அதிகாரிக்கும். வழக்கம் போல மக்கள் வரிப்பணம் சூறையாடப்படும்.

விவசாயிகள் படுகொலை செய்யவைக்க படுகின்றனர் அரசால். வானம் பொய்க்கிறது . அரசு ஏய்க்கிறது. விழாக்களுக்கு குறைவில்லை. நேரத்திற்குஒரு கண்ணீரில் அரசின் பார்வையில் தெரிவதில்லை. தீவிரவாத நடவடிக்கைகளை வேரருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் திவிரவாதி உருவாவதர்க்கான சூழ்நிலையை உருவாக்காதீர்கள்.

பொருளாதார சிறப்பு மண்டலங்கள் அமைத்து நாட்டின் வளமையை பெருக்க போவதாய் சொல்லிக்கொண்டு திரிவானேன்? இந்த நிலைமையில் அவற்றின் கழிவுகள் ஆற்றில் கலந்து ஏழை மக்களின் வயிற்றில் பல நோய்களை இலவசமாக தருகின்றன. ஆழ்துளை கிணறுகள் மூலம் மக்களின் அடிபம்பு நீர் ஆதாரங்களை சூறையாடுகின்றன.

ஆக அடித்தட்டு மனிதன் வாழவே முடியாத இத்தகு சூழ்நிலையையும் தந்து விட்டு, மேலும் எப்போது பார்த்தாலும் பாகிஸ்தான் தீவிரவாதி என ஓலமிட்டு ஓட்டுக்களை அறுவடை செய்ய முயற்சி வேறு. கலவரங்களை தூண்டி விட்டு குளிர் காய்வோர் பலர் இந்த கூட்டத்தை சார்ந்தவர் தான்.

தீவிரவாதத்தை எதிர்க்கும் முன்பு இந்த நடவடிக்கைகளையும் செய்தால் ஏன் தீவிரவாதி உருவாகப்போகிறான்?

புதன், 24 டிசம்பர், 2008

குட்டியானையின் அபாரம்


யானைக்குட்டி மச்சான் ( .முருகன்) பற்றி கட்டாயம் தெரிந்து வேண்டும். தன்னுடைய கால் கட்டைவிரலை கூட தன்னால் பார்க்க முடியாத துர்பாக்கியசாலி. யானை குட்டி என்றும் குட்டி யானை என்றும் அன்புடன் அழைக்கப்படுகின்ற நமது . முருகன் என்போரை தெரிந்து கொள்ளவில்லையாயின் வாழ்வின் பயனை நீங்கள் தொலைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.

கைப்பிள்ள ரகத்தை சேர்ந்தவன். யாருமே அடிவாங்கி இருக்காத இடத்தில் கூட தாட்டியமாய் நின்று பல பேச்சுகளை பேசி முதுகிலோ வேறு எங்கே யோ பல பரிசுகளை வாங்கி குவித்துக்கொண்டு இருப்பான். மேலும்

திங்கள், 22 டிசம்பர், 2008

தீவிரவாத தோற்றுவாய்கள்


தீவிரவாத தடுப்பு என்பது முக்கிய விடயம் என பல நாடுகளிலும் இப்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. தீவிரவாத ஒழிப்பை நடைமுறை படுத்துகையில் பல அப்பாவி பொது மக்களும் சொல்லான துயருற்று வருவதும் நாம் அறிந்ததே.
சில சுயநல ஆட்களால் பல அப்பாவி பொதுமக்கள் உயர் இழக்க நேருகையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என தெரியவில்லை ( யாராவது தெரிந்தால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும் படி தயை கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் )

இப்போது தீவிரவாத உருவாக்கத்திற்கான காரணங்களை ஓரளவு கண்டு கேட்டு அறிந்த வற்றை இந்த பதிவில் இடுகை இட சித்தம் கொண்டு உள்ளேன்.

* வறுமை
* வேலையின்மை
* பேராசை
* தேசப்பற்று இன்மை
* வாய்ப்பு மறுக்கப்படல்
*
வெறியூட்டப்படல்
*படிப்பு அறிவின்மை
*புறக்கணிக்கபடல்

பல இருந்தாலும் மேற்குறிப்பிட்ட காரணங்களே முக்கிய
இடத்தி பிடிக்கின்றன

வறுமை:

குடும்ப வறுமை, நம் பஞ்ச பட்டினிகளை களைய இயலாத அரசு மீது நம்பிக்கை தகருகின்றது . வறுமை பல கொடுமைகளுக்கு தாய் போல உள்ளது. தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பது போல . வறுமை பல கொடுமை செய்தாவது வயிற்று பாட்டை தீர்க்க தூண்டுகிறது. பின் வசதியாய் வந்தபின்னும் அதனை விட முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. தீவிரவாதிகள் மக்களின் வறுமையை பயன்படுத்தி குற்றம் புரிய தூண்டுகிறார்கள். அரசு மக்களை பட்டினியில் வைத்து இருப்பது ஒன்றே இந்த நிலை ஏற்பட காரணம். அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற இயலாத குடும்பத்தலைவன் இந்த நிலையில் என்ன வேண்டு மானாலும் செய்ய தயாராகி விடுகிறான் .

வேலையின்மை:

இந்த நிலை தான் வறுமைக்கே காரணம் . அவன் வேலையை சரியாக செய்து கொண்டு இருந்தாலே யாரையும் அண்ட வேண்டிய சூழ்நிலை குறைக்க படுகிறது . வேலை குடும்பம் குழந்தைகள் என்று வாழ்க்கை தானாக செல்ல ஆரம்பிக்கும் போது எந்த பிரச்சினையும் வருவதில்லை.

படிக்க முடிவதே இந்தக்காலகட்டத்தில் பெற்றோர்களுக்கு மிகப்பெரும் சுமையாக இருக்கும் போது படித்து முடித்த பின் வேலைக்கு அலைவது மிக அதிக மாக இருக்கின்றது படிக்க முடியவில்லை படித்தால் படித்ததற்கு வேலை இல்லை. சம்பந்தம் இல்லாத வேலைகளில் மனம் லயிக்க இயலாது. வேலை லஞ்சம் என்பது பல துறைகளில் நுழைந்து ஏழைகளுக்கு எட்டகனியாய் மாற்றமுயற்சிக்கின்றன. சிபாரிசு மற்றொரு பெருச்சாளி. திறமையுள்ளோர் பலர் வரிசயில் நிற்க இந்த இரண்டு ஜந்துக்களும் பல மக்களின் வாழ்கையில் கிலியை உண்டாக்கி உள்ளன.
திறமை உள்ளசிலருக்கு உடனே வேலை கிடைத்து விடுவது மகிழ்ச்சி. பலர் இன்னும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதால். விரக்தியடைந்து மூளை சலவைக்கு உட்படுத்தப்பட்டு தீவிரவாதிகளை மாற்றமடைகின்றனர்.

பேராசை:

சில காலத்திற்குள் பணம் சம்பாதிக்க வேண்டும். பட்டதெல்லாம் போதும் . பணம் வெந்தால் எதையும் செய்யலாம். உடனே பணம் சம்பாதிக்க வழிவகைகளை யோசிக்க ஆரம்பித்தால் தவறான பாதைகள் பயணத்திற்காக தயார்செய்ய ஆரம்பிக்கின்றனர். இந்த நிலைகளை தீவிரவாத இயக்கங்களுக்கு பல உதவிகள் செய்ய காரமாகி விடுகிறது. தீவிரவாதிகளின் வேலைகள் இவர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைக்கு தள்ளப்பட காரணமாகிவிடும்.

தேசப்பற்று இன்மை :

இன்மை இந்த தேசம் நம் அன்னை போன்றது இந்த தேசத்தை போற்றிக்காப்பது நம் கடமை என்பத்தி உணராமல் இருப்பதே தீவிரவாத செயல்களுக்கு அஸ்திவாரம். இந்த தேசத்தை காப்பது என்பது வறுமை, வேலையின்மை ஆகியவற்றை நீக்கினால் மக்கள் பற்றுகையை உணர ஆரம்பிப்பார்.

வாய்ப்பு மறுக்கப்படல்:

ஒருவனுக்கு நியாயகமாக கிடைக்க வேண்டிய பலன் கிடைக்க தவறும் பட்சத்தில் மனம் நொந்து கடுமையான வேதனைகள் அவனுக்குள் நுழைகின்றன . அப்போது அவன் உண்மையாக உழைத்த நேரங்கள் வீணடிக்க பட்டதை உணர ஆரம்பிக்கிறான். அப்போது இந்த மன நிலை தவறாக நினைக்க ஆரம்பிக்கின்றது .தீவிரவாதியாக மாறுவதுக்கு இது முன் நிலை,


வெறியூட்டப்படல்:

உலகத்தில் நீதான் எல்லாம் . நம்மைக்கக்க உனக்கு கடமை இருக்கிறது . உன்னால் முடியும் . இந்த செய்கைகளுக்கு உனக்கு எப்போதும் புகழ் பரவும். தியாகியாக்கி விடுவாய். தயக்க மடைய வேண்டாம். உனக்கு எப்போதும் நாங்கள் துணை இருப்போம் பயப்பட தேவை இல்லை. நீ இந்த காரியத்தை செய்து தான் ஆகவேண்டும். வேறவழி இல்லை என வெறி உள்ளுக்குள் ஏற்றப்பட வலுவாகிறது. அவர்கள் நம் எதிரிகள் அவர்கள் நம்மை துன்புறுத்துகிறார்கள் . அவர்களை பழிவாங்க வேண்டும் என பல காலங்களாக சொல்லி சொல்லியே வெறி ஊட்டப்படுவது ஒரு காரணமாகி விடுகிறது


படிப்பு அறிவின்மை:

கல்வி பெற்று வேலை இல்லாமல் இருப்பது மட்டும் இந்த நிலைக்கு காரணம் இல்லை. படிப்பு அறிவில்லாத காரணமும் முக்கியமானது தான் . நல்லது கெட்டது அறிவதற்கும் ., என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் இழப்பு ஏற்படுத்த இவர்கள் பயன் படுத்த படுகிறார்கள். நாடு எந்த நிலையில் உள்ளது அதற்க்கு நம் பங்கு என்ன என்பது பற்றியே அறிவியல் அறிவில்லாத நிலையில் மிக சாதரணமாக பல கொடிய செயல்களை செய்யபயிற்று விக்க படுகிறார்கள்.

புறக்கணிக்கபடல்:

மக்களில் பலர் கீழ் நிலை பெற்று காணப்படுகின்றனர் நியாயமான வாய்ப்புகள் கூட இவர்களுக்கு வழங்கபடுவதில்லை. தொடர்ந்து அரசால் கண்டு கொள்ள படாமல் இருப்பதால் நொந்து இந்த தவறான பாதைக்கு அடித்தளம் இடப்படுகின்றனர். உதாரணமாக வஞ்சிக்க பட்ட விவசாயி இந்த பாதையை நாடுவதும் நக்சல் பாதையை தேர்ந்து எடுப்பதற்கு காரணமாகி விடுகிறது.
நிலத்தை வலுக்கட்டாயமாக பறித்தல் . சமநிலை பாராது ஒரு சார்பாக இருத்தல் போன்றவையும் . மேலும் ஒடுக்க படல் போன்றவைகள் தீவிரவாத தோற்றுவாய்கள்.

இந்த நிலைகள் யாவும் அடிப்படையிலே கிள்ளி எறிவதால் மட்டுமே தீவிரவாதம் தழைக்காமல் காக்க முடியும் . சாதரண ஆள் கூட அடிபடைவசதிகளுடன் இருந்தால் தான் தீவிரவாத ஒழிப்புக்கு முழுமைப்படும்