செவ்வாய், 25 நவம்பர், 2008

வெள்ளகாரனை விரட்டிவிட்டோம் - 2


"பணம் பத்தும் செய்யும், பணம் பாதளம் வரை பாயும் " உண்மையாக பணத்தை வைத்து எதையும் செய்து விட முடியுமா? முடியும் என்கிறது முதலாளித்துவம். ஆனால்
அதற்க்கு தெரியுமா?. துப்பாக்கிசூடு, மெலிந்த நாடு மேல் போர் மற்றும் பொருளாதார தடை இதுவன்றி உங்களால் ஒரு வருடமாவது இருக்கமுடியுமா? முடியும் என நீங்கள் சொன்னால், வேறு வகையான பொருளாதார, அரசியல் காரணங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள் என்று பொருள் அல்லது உங்களை எதிர்பவர்களை உங்கள் வழிக்கு கொண்டு வதற்கு சமயம் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.


"எவன் எப்படி போனால் என்ன? எனக்கு என் பங்கை கொடு"இது தானே உங்கள் கொள்கை. இருக்கட்டும் நீங்கள் மட்டும் ஏதும் செய்யலாம். இளைத்தவன் செய்தல் பயங்கரவாதம், உலகிற்கு அச்சுறுத்தல், இதனை வன்மையாக கண்டிப்பதோடு, முடிந்தால் அந்த நாடுகள் மீது போர் தொடுத்து பல ராணுவ அதிகாரிகளுக்கு பாலியல் வேட்டைக்காடாக மாற்றி, இயற்க்கை வளங்களை கொள்ளையடித்து ஓட்டண்டியாக்கி விட்டு, சொன்னதை கேட்கும் மனித ரோபோவை ஆட்சி தலைமையில் அமர்த்தி, ஜனநாயகம் மலர்ந்து விட்டதாய் பொய் மூட்டையை தன் ஊடகங்களுக்கு தருவது .

ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும் காரியங்கள் உங்களால் செய்யப்பட்டு, இப்போது "உலகத்திற்கு இது மிக ஆபத்தானது. இத்தனை தவிர்க்கும் செய்கை ஆரம்பிக்கப்பட வேண்டும்" இப்படி பல தண்டோரக்களை போடுவதே பகுதி நேரதொழிலாக உடைய உங்களுக்கு எப்போது புத்தி வரும்?

வங்கிகள் திவலானபோது கொழுப்பு மூட்டைகளை கரையேற்றி பெரும் அழிவிலிருந்து முதலாளித்துவத்தை காப்பாற்றியதாக பெருமிதம் கொள்ளும் அவ்வேளைகளில், சாதாரண குடிமகன் வீதிக்கு வந்து விட்டதை எண்ணாமல் இருக்கிறேரே....


தன் நாட்டு மக்களை காக்க முடியவில்லை என்ன சொல்வது நட்டு பொருளாதரத்தை காக்க, முடியவில்லை காண்கிறார், காதுசெவிடாகி விட்டது, இந்த பொய்களை கேட்டு கேட்டு.

தன்நாட்டு மக்களை காக்க தெரியாதவன் அடுத்த நாட்டு மக்களை ப்பற்ற வருகிறானாம், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது
தமிழ் சொலவடை . இதனை மெய்பிப்பது போல எவர்கள் செயல்கள் உள்ளன. தடையற்ற வாணிபம் வேண்டுமாம், இதனால் உள்நாடு கைத்தொழில் பாதிப்படைந்தால் யாருக்கு நட்டம்? சிந்தித்தால் குமட்டல் வருகிறது உண்மை நிலை கண்டு.

விலை குறைவு தானம் அந்த பொருள்களுக்கு. அடக்க விலை நம் நாட்டுஅதற்க்கு அப்பால் அதிகம் தான். ஆனால் நாமே விலை நிர்ணயம் செய்து கொள்ளும் உரிமையை நமது நாட்டனுக்கே தருகிறோம். ஆனால் பன்னாட்டு கம்பனிகள் தற்போது விலையை குறித்தும், பின் வரும் நாட்களில் விலையை அதிகரித்து vidum. ஆமாம் போட்டிக்கு வந்த நமது நாட்டு பொருள்களெல்லாம் அடிமாட்டு விலைக்கு விற்க இயலாததால் நசிந்து விட்டபின் ( யாரும் போட்டிக்கு வர இயலாது எனும் போது, அதனை அத்யாவசிய பொருளாக ஆக்கியபின்) மாறிவிடும்.

கருத்துகள் இல்லை: