புதன், 10 டிசம்பர், 2008

அமெரிக்காவின் மும்பை சம்பவ தாக்கம்

இந்தியா எப்போதும் பாகிஸ்தானை எதிரியாகவே பார்த்து வருவதால் வந்த விளைவே இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை பாகிஸ்தானை தொடர்பு ஏற்படுத்துவதற்கு காரணமாகும். வல்லாதிக்க அரசுகள் எப்போதும் தன்னுடைய சரக்கு விற்பதற்கு செயற்கையான பல பஞ்சங்களை ஏற்படுத்துவது, பின் சரக்கிற்கு விலை ஏற்றுவது போன்ற "நல்ல" வேலைகளை பார்த்து போரடித்து விட்டதால், வேறு வழிகளை யோசித்து கண்டுபிடித்த முறைதான் "தீ குச்சி உரசல் முறை" அதாவது ஏற்கனவே தீ பிடிக்க காரணங்களை தேடிக்கொண்டிருக்கும் போது இந்த வல்லரசு நாடுகள் சரியாக பற்ற வைத்து " பத்த வச்சுட்டியே பரட்ட " என்ற பாராட்டை மறைமுகமாய் பெற வைக்கின்றன.


கோவை குண்டு வெடிப்புக்கு அமெரிக்க இந்த அளவு ஈடுபாடு காட்ட வில்லை. நாடளுமன்ற தாக்குதல் கூட அமெரிக்க தளங்களை யோசிக்க வைக்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலில் இவ்வளவு ஈடுபாடு காட்ட காரணம் என்ன? ஆறு அமெரிக்க பிரஜைகள் இறந்ததை காரணம் காட்டி இந்திய நாட்டுக்கு தானும் விசாரிக்க அதிகாரம் உண்டு என பறை யடிக்கிறது. அமெரிக்க நாட்டில் இந்திய மாணவ மாணவிகள் தற்போது கொலையாகிறார்கள். இத்தனை விசாரிக்க இந்தியாவிற்கு அதிகாரம் உள்ளதா அமெரிக்காவில்?

தாக்குதலை செப்தம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் தீவிரவாத நடவடிக்கைக்கு ஒப்பாக அமெரிக்க கருத காரணம்? அப்போது தான் பேரழிவு ஆயுதங்கள் ஆப்கான் மண்ணில் சோதிக்கப்பட்டன. சோதனை எலிகளை மாற்றப்பட்ட அந்த நாட்டு அப்பாவி மக்களின் மூலம் சோதனையை சரிபார்த்து கொண்டது( இதற்க்கு முன் வியட்னாம் நாட்டில் அரங்கேற்றியது) அங்கு வாங்கிய அவமானத்தை போல அவமானத்தை எங்கும் பெறவில்லை. பல ஆயுதங்களை மக்களை அழிப்பதற்காகவே சோதனை செய்து நிறைவேற்றினர்.


எதோ மனித உரிமை கழக தலைவர்போல பிலிம் காட்டினாலும், அப்பாவி மக்களை அழித்ததை என்ன சொல்லி நியாப்படுத்த போகிறது ? வழக்கம் போல பல ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்டு முடித்து கொள்ள போகிறதா? அல்லது மீள் கட்டுமானத்துக்கு வழி வகை செய்ய போகிறதா? பல வழிகளில் மக்களை கொன்று தீவிரவாதபட்டம் கொடுத்து ஒழிக்க படுபடுகிறதே அன்றி வேறென்ன? நிற வெறிகளில் ஊறிய இந்த கூட்டத்திற்கு வேறென்ன தெரியும்? எதோ இந்தியாவின் நண்பனாக முகமுடிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ அமெரிக்க இந்தியாவில் வேரூன்ற தருணத்தை எதிர்பர்த்துக்கொண்டிருந்து வந்ததால் வந்தது சாக்கு என வானம் பூமி எல்லாம் இந்தியா பாதிக்க பட்டது, பாகிஸ்தான அரசால் என்று சொல்லாமல் சொல்கிறது. இந்த அமெரிக்க அரசு முன்னைய நாட்களில் இந்திய - பாகிஸ்தானிய யுத்தத்தில் யாருக்கு ஆயுதம் கொடுத்து ? பாகிஸ்தானுக்கு. பின் என் பழைய பாகிஸ்தான் நண்பனை அழிக்க காரணம் தேடுகிறது? .

பாகிஸ்தான் மண்ணில் ஏற்கனவே பயங்கரவாத வேட்டை என
தன் காலை வைத்தாகி விட்டது. இந்தியாவில் பல காலமாக தங்கி இருந்தாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை அமெரிக்க உளவுத்துறையால் ஏனெனில் காரணம் சரியாக அமையவில்லை.

நமக்கெல்லாம் தெரிந்த வரலாற்றில், அடக்கு முறை ரெம்ப காலம் தாக்கு பிடிக்க இயலாத. ஆனால் இந்த அடக்குமுறை ( நாடுகளை தனக்கு கீழ் அடிமை போல நடத்தல் " நவீன அடிமை முறை " ) விட்டுசெல்லும் பதிப்புகள் அதிகம். இதற்க்கு மக்கள் பல உயிர்களை காவு வாங்கி எத்தனை வரலாறுகளில் பதிக்க போகிறது?

முதல் உலகப்போருக்கு காரணம் "ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர் ". இந்த இரண்டு உயிர்களுக்கு உலகமே இரண்டு பிளவாக பிரிந்து மக்களை அழிக்கும் வேலை மிக ஜோராக நடந்தது. வீரர்களை விட பல மடங்கு மக்கள் செத்து மடிந்தனர். இந்த உத்தியின் அடிப்படையில் இந்தியாவை தூண்டிவிட்டு போர் வெறி கொள்ள செய்யும் தனது உத்தியை பயன் படுத்த ஆரம்பிக்கிறது.

இந்த மும்பை தாக்குதல் நடவடிக்கையால் இந்தியா அடைந்த இழப்பு அதிகம். இதற்க்கு பாகிஸ்தானை மாட்டுமே குறை சொல்வது எந்தவகை இல் நியாயம்? இந்தியா வின் உன்நாட்டு உளவு இந்த அளவு மோசமாக ஆனது எப்படி? யாரை குற்றம் கூற? பயங்கர வாதிகளை பாகிஸ்தானிய அரசே தாக்குதல் நடத்த சொன்னது போல் ஒரு மாயபிம்பத்தை உண்டாக்கியிருக்கிறது.

இந்தியா எப்போதும் அயல் நாடுகளில் நட்பு கொள்ளவே விரும்புகிறது. அதன் படி நடந்தும் வருகிறது. எல்லைகளில் ஏற்படும் சிறிய சலசலப்பும் சுமூகமாக தீர்கவே விரும்புகிறது. ஆனால் சில ஏடுகள் உடனே போர் அபயம் ஏற்பட்டு இருப்பதாக அச்சுறுத்த ஆரம்பிக்கிறன.

இரண்டாம் உலகபோர் ஏகாதிபத்திய நாடுகளின் பேராசைகளே . அவை தனக்கான சம்பளத்தை வாங்கி கொண்டும் விட்டன. இருதாலும் சில நாடுகள்நவீன காலனித்துவத்திற்கு ஆதிக்கம் பெற முயற்சிக்கின்றன.

சில நாடுகள் பலியாடுகளை மாற்றப்படும் விட்டன. சில மறுத்து போராடிக்கொண்டும் வருகின்றன. நாம் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அதே நேரத்தில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இருமுனை தாக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது.

நான் மும்பை சம்பவத்தை நியாய படுத்த விழைய வில்லை. இந்த இழப்பு நமக்கு ஈடு கட்ட இயலாததே அன்றி வேறில்லை. பயங்கரவாதிகளின் சட்டத்தின் முன் தண்டனை பெற வேண்டும். அதனை விடுத்து மக்களை பாடுபடுத்துவது எந்த வகைகளில் நியாயம்?

3 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\கோவை குண்டு வெடிப்புக்கு அமெரிக்க இந்த அளவு ஈடுபாடு காட்ட வில்லை. நாடளுமன்ற தாக்குதல் கூட அமெரிக்க தளங்களை யோசிக்க வைக்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலில் இவ்வளவு ஈடுபாடு காட்ட காரணம் என்ன? ஆறு அமெரிக்க பிரஜைகள் இறந்ததை காரணம் காட்டி இந்திய நாட்டுக்கு தானும் விசாரிக்க அதிகாரம் உண்டு என பறை யடிக்கிறது. அமெரிக்க நாட்டில் இந்திய மாணவ மாணவிகள் தற்போது கொலையாகிறார்கள். இத்தனை விசாரிக்க இந்தியாவிற்கு அதிகாரம் உள்ளதா அமெரிக்காவில்?\\

மொதல்ல அக்கறையிருக்கான்னு பாருங்க.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\எதோ மனித உரிமை கழக தலைவர்போல பிலிம் காட்டினாலும், அப்பாவி மக்களை அழித்ததை என்ன சொல்லி நியாப்படுத்த போகிறது ? வழக்கம் போல பல ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்டு முடித்து கொள்ள போகிறதா?\\

ஈராக் விஷயத்தில் மண்ணிப்பு கேட்டுவிட்டதாக ஏதோ ஒரு வலைப்பூவில் படித்தாக ஞாபகம்.

Che Kaliraj சொன்னது…

உண்மைதான் தோழரே நான் கூட "ஈராக் மீது போர் தொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுஇருக்கிறார் அமெரிக்கா அதிபர் புஷ் என்று குறிப்பிட்டு இருக்கிறேன்", நானும் வலைபூவில் படித்ததையே இங்கு எடுத்து காட்டியுள்ளேன். ஆயினும் மன்னிப்பு கேட்பதால் பெரிதாக என்ன நேர்ந்து விட போகிறது ? பாதிக்கப்பட்ட மக்களின் என்ன மீள் முன்னேற்றம்? அமெரிக்கா இந்தியா வில் நடந்த தாக்குதலை கவனத்தில் கொள்கிறது. ஆப்கனிஸ்தானில், ஈராக்கில் தான் செய்யும் நடவடிக்கையை தீவிரவாத ஒழிப்பு என்கிறது அங்கும் இறப்பவர் அப்பாவி மக்கள் அன்றோ ? நம் மானுட வர்க்கம் அன்றோ? தீவிர வாதிகளை அழிக்க இயலாமல் அப்பாவிகளை மட்டுமே அழித்து கொண்டு இருக்கிறது.