செவ்வாய், 25 நவம்பர், 2008

வெள்ளகாரனை விரட்டிவிட்டோம் - 1


நாம் சுதந்திரம் பெற்று விட்டோமாம். அட ஆமப்பா நாம வெள்ளகாரனை விரட்டிவிட்டோம். ஆனா அப்பவும் நம்ம அடிம புத்தி போகல. என்னடா நாமெலாம் பெரிய பெரிய பதவில இருக்கோமே , பின் ஏன் இந் வார்த்தை வரவேண்டும் என கேள்வி எழும் போது, அதற்கான விடை மிக சாதாரணமா சொல்லிவிடலாம். இப்போது நமது சுதந்திரமானது அடகு வைக்கபட்டிருப்பது, பன்னாட்டு கம்பனிகளிடம், அமெரிக்க ஏகாதிபத்தியம் இத்தனை சத்தமின்றி உலகை கம்பனிகளிடம் சொல்லிகொடுத்து கொண்டிருக்கிறது.


கரண்ட் இல்ல , கரண்ட் இல்ல நீ புலம்பாதே, எதாவது ஒரு கம்பனிகிட்ட ஒரு இன்வேர்டேர் வங்கிக்க, காசுகொடுத்துத்தான். என்ன ?, பன்னாட்டு கம்பனிகள் நிறைந்து இருக்கும் பகுதிகளுக்கு மட்டும் தாம் கரண்ட் தட்டுபாடு இல்லை. நம்ம நட்டு கம்பனி எப்படி போனால் நமக்கென்ன? அவன் வருசத்துக்கு போதும் எனும் அளவுக்கு " " தருவான் ஆனா நீ வரிதானே கொடுக்கிற?.அப்பறம் சங்கம் அப்படி இப்படி சொல்லி தோழர்கள் யாரும் வருசத்துக்கு பேசபடாது. வேலைக்கு உத்தரவாதம் தர முடியாது. மீறினால் வேலை நிரந்தரம் இல்லை.


இந்தியாவில் அடிமைமுறை இல்லை என நாம் பெருமை கொள்ள வைக்கப்பட்டு இருக்கிறோம். அடிமை என்று வரும்போது கோவில்களில் காணப்பட்ட தேவதாசி முறை கூட அடிமைமுறைதானே. அவர்கள் திருமணம் செய்ய கூடாது. ஆண்களின் போக பொருள்களாகவே நடத்தப்பட்டனர். சரி அது கூட தற்போது ஒழிக்க பட்டு விட்டது போல் ஆகி விட்டது எனக்கூறினாலும். பல செங்கல் சூளைகளில், பல தீப்பெட்டி, வெடிமருந்து தொழில் சாலைகளில் இன்னமும் தொடர்கிறது பாதுகாப்பற்ற முறைகளில் இன்னமும் தம் இன்னுழப்பை வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

அடிப்படை கல்வி மறுக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் ஒரு வகையில் அடிமையே. இம்முறை ஒழிய கடுமையான சட்டங்கள் பிறப்பிக்க பட்டு , தீவிரமான முறைகளில் அமுல் படுத்த வேண்டும். அப்படி தவறு கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் தவறு செய்தவர் ( அடிமையாக வைத்திருந்தவர்) தீவிரமான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

2 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அடிப்படை கல்வி மறுக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் ஒரு வகையில் அடிமையே.\\

சோக்க சொன்னீக

\\இம்முறை ஒழிய கடுமையான சட்டங்கள் பிறப்பிக்க பட்டு , தீவிரமான முறைகளில் அமுல் படுத்த வேண்டும்.\\

இதெல்லாம் நடக்குற கதையா (ஆதங்கத்தின் வெளிப்பாடு)

Che Kaliraj சொன்னது…

எப்போதுதான் திருந்தும் இவ்வுலகம்? இந்த கேள்வியை விட, "நாடு நமக்கென்ன செய்தது என்பதை விட, நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்?" என்று நான் பதில் கேள்வி கேட்க மாட்டேன், உங்கள் ஆதங்கம் புரிகிறது, ஆயினும் கூடுமானவரை மத்திய தர வர்க்கமும், கீழ் மட்ட வர்க்கமும் மட்டும் போராட்டம் நடத்தினால் போதாது, மேல் மட்ட வர்க்கமும் இத்தனை பற்றி சிந்தித்தால் மாறலாம்.